பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் திருத்தப்பட்ட புதிய பட்டியலை அரசு வர்த்தமானயாக வெளியிட்டுள்ளது.
இந்த புதிய பட்டியல், 2026 ஜனவரி 6ஆம் திகதி வெளியிடப்பட்ட 2470 கீழ் 19 வது இலக்க விசேட வர்த்தமானி மூலம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன் மூலம், முன்னதாக அமலில் இருந்த பழைய பட்டியல்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பட்டியல் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 மே மாதத்தில் இறுதியாக புதுப்பிக்கப்பட்ட பட்டியலை மாற்றியமைக்கும் வகையிலேயே இந்த புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தல், ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அரசின் சார்பில் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த திருத்தப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சொந்தமான அனைத்து வங்கி கணக்குகள், நிதி வளங்கள் மற்றும் பொருளாதார சொத்துக்களை உடனடியாக முடக்கும் உத்தரவும் தனியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தகுதியான அதிகாரியாக கையெழுத்திட்டுள்ளார்.
இந்த புதிய திருத்தப்பட்ட தீவிரவாத பட்டியல், அரசின் உத்தியோகப்பூர்வ வழிகளின் ஊடாக பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தழிழர்களின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது.
00000000
இந்த பட்டியலில், ரமேஷ் (சுபேஷ் சத்குணராஜா), பண்டுல கஜவீர குணரத்ன, அண்ணலிங்கம் காண்டீபன், கனிகையலம் சிறி சங்கர், சுப்பிரமணியம் விவேகானந்தன் (சிரன்), ஜெகதீவன் வகீசன் (சின்னவன், மாணிக்கம்) உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.
