முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் இன்று (05) காலை அங்கு முன்னிலையாகியுள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில், விவசாய அமைச்சின் நடவடிக்கைகளுக்காக ராஜகிரிய பகுதியில் வாடகை அடிப்படையில் ஒரு கட்டிடம் பெற்றுக்கொண்டமை தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, அக்காலத்தில் அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய ரிஷாட் பதியுதீனிடமிருந்து வாக்குமூலம் பெறும் நோக்கில் அவர் இன்று விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதற்கமைய, இன்று காலை அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
