செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமாகுமா?

e0ae87e0aeb2e0ae99e0af8de0ae95e0af88e0aeafe0aebfe0aeb2e0af8d e0ae92e0aeb0e0af87 e0aeaae0aebee0aeb2e0aebfe0aea9e0aea4e0af8d e0aea4 | Pathivu News

இலங்கையில் ஒரே பாலினத் திருமணங்களை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் தற்போது எந்தத் திட்டமோ அல்லது கலந்துரையாடல்களோ இல்லை என நீதியமைச்சரும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சருமான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஒரே பாலின சம்மத உறவுகளை குற்றமாக்கும் குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகளை நீக்குமாறு கடந்த ஆண்டு மே மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நீதியமைச்சகத்திடம் வலியுறுத்தியிருந்தது.

இப்பிரிவுகள் தனிநபர்களின் தனியுரிமை மற்றும் சுதந்திரத்தை பாதிப்பதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, 2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் அதிகாரமளிப்பு சட்டம் பாலினம் மற்றும் பாலியல் அடையாளத்தின் அடிப்படையில் பாகுபாடு செய்யப்படக் கூடாது என்பதை சட்டரீதியாக அங்கீகரிப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி அரிதா விக்ரமசிங்க, திருமணம் என்பது சட்ட ஒப்பந்தம் என்றும், ஒரே பாலின உறவுகளை குற்றமாக்கும் நடைமுறையை நீக்குவதே உடனடி சட்டத் தேவையெனவும் கூறினார்.

குற்றச் சட்டத்தின் 365 மற்றும் 365 பிரிவுகள் காலனித்துவ காலச் சட்டங்களாக இருந்து, தனிநபர்களின் தனிச்சுதந்திரத்தில் தலையீடு செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp