அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் பதவிவிலக வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு, பணிப்புரை வழங்க தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் இன்று (03) வவுனியா குருமன்காட்டில் உள்ள தாயகம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த எம்.ஏ. சுமந்திரன், இந்த முடிவு அரசியல் குழுவில் எடுக்கப்பட்டதாக கூறினார்.
