தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தை ஆதரித்து கலந்துகொண்டனர்.
பெருமளவில் பொலிஸார் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டு அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர். பௌர்ணமி தினத்தின்போது, சீகிரியாவிலிருந்து புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த குழுவை காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைக்காக அழைத்து, வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர் தையிட்டிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினர்.
மேலும், போராட்டத்தில் கலந்துகொள்ளும் அனைவரின் விபரங்களையும் பொலிஸார் பதிவு செய்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. குறிப்பாக, சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகளின் விபரங்களும் பதிவு செய்யப்பட்டு வழிமறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

