உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்த ராஜபக்சவை கைது செய்ய போவதில்லை- பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கைது செய்ய எந்தத் திட்டமும் இல்லையென பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மகிந்த ராஜபக்சவையும் அரசாங்கம் கைது செய்யும் என்ற ஊகங்கள் எழுந்த நிலையில், அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

‘எவரையும் கைது செய்வதற்கான முயற்சி எதுவும் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படவில்லை.

எங்களின் நோக்கம் அது அல்ல. மாறாக, இதுவரை கவனிக்கப்படாமல் போன முன்னாள் குற்றச்செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகின்றன,’ என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் அரசாங்க தலையீடு இன்றிக் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID), நிதி குற்றப் புலனாய்வு திணைக்களம் (FCID) இணைய குற்றப்பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு (CIABOC) போன்ற சுயாதீன அமைப்புகள் வழியாக நடத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

‘ஒருவர் முன்னாள் ஜனாதிபதியோ, அமைச்சரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது சாதாரண குடிமகனோ என எவராக இருந்தாலும் குற்றம் புரிந்திருந்தால் சட்டத்தின் முன் விடையளிக்க வேண்டியிருக்கும்.

அவர்கள் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சட்டம் ஒரே மாதிரி அமையும்,’ என அமைச்சர் வலியுறுத்தினார்.

அதற்கான உதாரணமாக, தற்போது ஆட்சியில் உள்ள எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியைச் சார்ந்த குற்றச்சாட்டுகளையும் விசாரிப்பதற்குத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘எங்கள் அரசாங்கம் பழிவாங்கும் அரசியலை நடத்தவில்லை.
சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கே எங்கள் முயற்சி.
யாரும் சட்டத்திற்கு மேல் இல்லை. சாதி, வர்க்கம், அதிகாரம் எதுவாயினும் குற்றம் செய்தால் கைது செய்யப்படுவர்,’ என அமைச்சர் வலியுறுத்தினார்.

இதேவேளை, மகிந்த ராஜபக்சவின் பேச்சாளர் ரவீந்திர மனோஜ் கமகே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை ‘அரசியல் பழிவாங்கல்’ எனக் குறிப்பிட்டார்.

‘அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்களையும் முந்தைய ஆட்சியினரையும் குறிவைத்து அதிகபட்சமாக தொந்தரவு செய்கிறது.

குறிப்பாக ராஜபக்ச குடும்பமே இப்போது அவர்களின் முக்கிய இலக்காக உள்ளது.
மகிந்த ராஜபக்சவை கைது செய்வது அரசாங்கத்துக்கு சாத்தியமில்லாத ஒன்று. ஆனால் நாமல், யோஷிதா உள்ளிட்டவர்களை குறிவைத்து வருகின்றனர்,’ என்றார்.

‘நாமல் ராஜபக்ச நிச்சயமாக கைது செய்யப்படக்கூடிய முக்கிய இலக்காக உள்ளார்,’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp