உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழரசின் கதவடைப்பு அழைப்பிற்கு திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு ஆதரவு

எதிர்வரும் திங்கட்கிழமை (18-08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.

இத்துடன், திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் இந்த ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த தொடர்பில் அவர் தெரிவித்ததாவது:

வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தையும், முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோருவதையும், செம்மணி போன்ற இனப்படுகொலை சம்பவங்களுக்கு நீதி நிறைவேற்றப்பட வேண்டியதையும் கருத்தில் கொண்டு அனைவரும் இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

இது கட்சி சார்ந்த ஒன்றல்ல் இனத்தின் நலனை கருதிய நடவடிக்கை என்பதால், அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் வலியுறுத்தினார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp