தமிழ் தேசிய அரசியல் பரப்பை முன்னர் உதயன் பத்திரிகை அதன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
அப்போது அதன் ஆசிரியராக சிரேஸட்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் பணியாற்றினாhர்
தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமைத்து தேர்தல் அரசியலில் இறங்கிய போது கூட்டனி தலைவர் ஆனந்தசங்கரிக்கு பயந்தனர் என பரவவாக பேசபப்பட்ட விடயமாகும்.
ஆயினும் மகேஸ்வரனை அன்று வெல்லப்பண்ணியது வித்தியாதரனின் ஊடகவியல் என்பது ஊடகவியல் தெரிந்தவர்கள் மறுத்து பேச முடியாத விடயமாகும்.
இன்று உதயன் பத்திரிகையின் உரிமையாளரையே வெல்ல வைக்க முடியாத நிலையிலேயே உதயன் பத்தரிகை இருக்கின்றது என்பது வேறு விடயம்.
அன்றைய உதயன் பத்தரிகை போன்று; தமது கட்டுப்பாட்டினுள் தமிழ் தேசிய அரசியல் பரப்பை வைத்திருக்க தாயக மற்றும் புலம்பெயர் ஊடக நிறுவனங்கள் தலையால் நடக்க தொடங்கியுள்ளன.
லைக்கா நிறுவன இயக்குனர் அல்லிராஜா சுபாஸ்கரன் முதல் ஐபிசி இயக்குனர் பாஸ்கரன் வரை வேட்பாளர்களை தமது சட்டைப்பைகளுள் வைத்தவாறு வெற்றிக்காக அலைந்து திரிவதாகவும் பணத்தை அள்ளி எரிவதாகவும் புலம்பெயர் மற்றும் தாயக பரப்பிலே பேசப்படுகின்றது.
லைக்கா உரிமையாளர் தனது பினாமி வேட்பாளர் குருசாமிக்கு கோடிகளில் அள்ளிக்கொடுத்து சசிகலா ரவிராஜ்ஜினை வெல்ல வைக்க முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது
எனினும் அள்ளிக்கொடுப்பதை குருசாமி பதுக்கிக்கொண்டு கிள்ளி கொடுப்பதாக ஊடக வெளியிலே பேசப்படுகின்றது.
சாதாரண மக்களும் நடுநிலை வகுப்பினரும் வாழ்வதாரம் மற்றும் தமது பொருளாதார வளர்ச்சிகாக நேர் வழியில் போராட பணத்தை மெத்தையாய் கொண்டவர்கள் ஆசன பசியால் அதாவது பாராளுமன்ற ஆசன பசியால் போராடிக்ககொண்டிருப்பதாக அரசியல் அவதானிகளும் நடுநிலையாளர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்
