உள்ளூர் செய்திகள்

தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுடன் பேச தயாரென்கின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொது வேலைத்திட்டமொன்றின் கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த் தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சிமன்றத்தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உள்ளுராட்சிமன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது குறித்து ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட ஏனைய தமிழ்த்தேசிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தது. அதன்பிரகாரம் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரை காத்திரமான முறையில் கையாளவேண்டியது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதன் ஊடாகவே அடுத்தகட்டமாக தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ளமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்பிரகாரம் பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய தரப்புக்கள் ஒத்த நிலைப்பாட்டின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டியது அவசியம் எனவும், அதனை முன்னிறுத்தி தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளுடனும், தமிழ்த்தேசியப்பரப்பில் இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இப்பேச்சுவார்த்தைகள் பதவி சார்ந்தவை அல்ல என்பதால், தமிழ்மக்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக்கட்சியும் இதில் பங்கேற்கவேண்டும் என்றும் கஜேந்திரகுமார் வலியுறுத்தியுள்ளார்.

அத்தோடு எதிர்வரும் 11 ஆம் திகதி தமது கட்சியின் மத்திய குழுக்கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருப்பதாகவும், அதன்போது மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகளுக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp