உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

விடுதலைப்புலிகளை மீளுருவாக்கும் சிந்தனை கொண்வர்கள் நிலத்திலும் புலத்திலும் உள்ளனர்- பொன்சேகா

வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணிகள் விடுவிப்பின்போது பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவி்க்கையில் ,வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர்.

விடுதலைப்புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர்.

7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரையானோர் அவ்வாறு இருக்கலாம்.

அதேபோல் விடுதலைப்புலிகளை ஆசிர்வதித்த அரசியல்வாதிகளும் உள்ளனர்.

விடுதலைப்புலிகளை மீள் எழுச்சி பெற வைப்பதற்கு முற்படும் புலம் பெயர் தமிழர் குழுவும் உள்ளது.

இப்படியான அச்சுறுத்தல் இருப்பதால், போர் மூண்ட பிறகு முகாம்கள் அமைப்பது பற்றி சிந்திக்காமல், தூர நோக்கு சிந்தனை அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் முகாம்கள் இருக்க வேண்டும்.

அதற்காகப் போர்க் காலத்தில் இருந்ததுபோல் அல்ல. பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்படாத வகையில் நகர்வுகள் இடம்பெறவேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உள்ள பாதுகாப்பைப் பலவீனப்படுத்தினால் அது யாழ். மக்களுக்குத்தான் சரி இல்லை.

அங்கு ஆவா என்ற பாதாளக் குழுவொன்று இருந்தது. கேரள கஞ்சாக்கள் வருகின்றன. வீதித் தடைகளை நீக்கினால் தெற்கிலுள்ள பாதாளக் குழுக்கள் வடக்குக்குச் சென்று ஒளியக்கூடும்.
எனவே, பாதுகாப்பு நெறிமுறைகள் அவசியம். சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கு இல்லை என்பதைப் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp