Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது

டொக்டர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறுக்கு மன்னார் நீதிமன்றத்தால் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இன்று நடைபெற்ற (30) வழக்கு விசாரணையின் போது; நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நிலையிலேயே நிதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பிதது உத்தரவுட்டுள்ளது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் இரண்டு சரீர பிணையில் வைத்தியர் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டார்.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments