உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவு விபத்தில் 8 வயதுடைய பாடசாலை மாணவி பலி

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுகேணி பகுதியில் இன்று காலை 7 மணியளவில் பாடசாலைக்கு செல்லும் வழியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் சென்று கொண்டிருந்த பணிஷ் வாகனத்தில் பணிஷ் ஒன்றை வாங்கிவிட்டு திரும்பி சென்றபோது கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற பட்டாரக வாகனம் மோதி விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன், குறித்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எட்டு வயதுடைய மாதீஸ்வரன் நர்மதா என்ற தரம் மூன்றில் கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்விகற்கும் பாடசாலை மாணவியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் வேளைகளில் குறித்த கர்நாட்டுக்கேணி பகுதியில் பொலிஸ் யாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் கர்நாட்டுக்கேணி மக்கள் விசனம் தெரித்துள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதியும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp