உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாலசந்திரன் இன்றும் உயிர்வாழ்கின்றான், என்றென்றும் உயிர்வாழ்வான்- நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் பஞ்சாபின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

விடுதலைப்புலிகளின் தலைவரின் மகன் பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான் அவன் இன்றும் உயிர் வாழ்கின்றான் என்றென்றும் உயிர்வாழ்வான் என பஞ்சாப் மாநில முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜக்மோகன் சிங்தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி கோவையில் உள்ள கொடிசியா மைதானத்தில் இடம்பெற்ற நாம் தமிழர் கட்சியின் தமிழனப்பேரெழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

பிரபாகரன் முதல் அனைவரையும் கொன்றுவிட்டோம் என தெரிவித்தார்கள்.

இங்கு கூடியிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பிரபாகரன்

இந்த குழந்தை பாலசந்திரன் 12 வயதில் கொல்லப்பட்டபோது,நான் அவரின் கதையை எழுதினேன்.அவரை நேரடியாக பார்த்திராத போதிலும் நான் அவரை பற்றி எழுதினேன்.

தந்தையும் தாயும் எவ்வாறு சிந்திப்பார்கள் சமூகம் எவ்வாறு சிந்திக்கும் என நான் எழுதினேன்.கைதுசெய்யப்பட்ட பின்னர் 12 வயது சிறுவன் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டமை குறித்து என்ன நினைப்பார்கள் என எழுதினேன்.

ஆனால் இன்று பாலசந்திரன் எங்கிருக்கின்றார்.பாலசந்திரன் எங்கள் இதயங்களில் இருக்கின்றான்.இங்கிருக்கின்ற ஒவ்வொருவரினதும் உடலின் இடதுபக்கத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றான்.

பாலசந்திரன் இன்றும் வாழ்கின்றான் என்றென்றும் வாழ்ந்துகொண்டிருப்பான்.

இனப்படுகொலையின் காலடிச்சுவடுகள் என்ற இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்ற ஒவ்வொரு கதையையும் மீண்டும் மீண்டு;ம் சொல்லவேண்டும்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp