உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை 2 நாடகளில் மீட்ட பொலிஸார்

வவுனியாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்ட நெளுக்குளம் பொலிஸார், பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தலைமையில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் பின், ஞாயிற்றுக்கிழமை (04) கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.

கைதானவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp