உள்ளூர்

இலங்கையில் ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எதிர்வரும் மே 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

அதனை முன்னிட்டு குறித்த நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

உலகளாவிய ரீதியில், ஒரு இலட்சம் பேரில் 3,340 பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளமை புள்ளிவிபரங்கள் ஊடாக அறிய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகளவில் இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக உள்ளது.

இன்ஹேலர் அடிப்படையிலான சிகிச்சையினால் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் ஆஸ்துமாவை திறம்பட நிர்வகிக்க முடியும்.

அடிக்கடி சளி மற்றும் இருமல் ஏற்படும் நபர்கள் ஆஸ்துமா நோய் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

வைத்தியரை நாடும்போதுஇ தங்களுக்கு உள்ள சகல சுவாசப் பிரச்சினைகளையும் அறியப்படுத்த வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் ஆஸ்துமா நோயினை ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும் எனவும் சுவாச நோய் தொடர்பான வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்>தேர்தல் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் உயிரிழப்பு!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp