எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாக வாக்குப் பெட்டிகளை அனுப்பும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்இ மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ் மாவட்ட பதில் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் கள ஆய்வை மேற்கொண்டார்.
இதன்போதுஇ யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
இக் கள ஆய்வில் மண்டப ஒழுங்குகள்இ போக்குவரத்துஇ பொது வசதிகள்இ நலனோன்பு வசதிகள்இ மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கள ஆய்வில் பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன்இ சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள்இ பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாத்தாட்சி அலுவலர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இதையும் படியுங்கள்>சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் விளையாடக்கூடாது-ரணில்
https://www.youtube.com/@pathivunews/videos



