உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக மேலும் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அதீத வெப்பம் காரணமாக நேற்று (30-04) வீதியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

இந்த நபர் வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது மயங்கி விழுந்துள்ளார்.

அவ்வேளை அவரை வீதியால் சென்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்தபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் மயக்கமடைந்து மரணம் சம்பவித்துள்ளது என மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் அந்த நபர் காலை உணவை அருந்தாமல், வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்டவெளியில் பயணித்துக்கொண்டிருந்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp