உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்குமிடையில் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்குக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது

இந்தியாவின் நாகையிலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருவதாகவும் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் சரக்கு கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இடம்பெற்றுவரும் நிலையில், பயண கட்டணத்தை குறைத்துள்ளதாக சுபம் கப்பல் நிறுவனத்தின் தலைவர் சுந்தர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நாகையில் இருந்து யாழ். காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இதனை தனியார் கப்பல் போக்குவரத்து நிறுவனமான சுபம் கப்பல் நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயணக் கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் கப்பல் பயணிகளுக்கு உதவும் வகையில் தற்போதைய கட்டணமான 8,500 ரூபா (இந்திய ரூபா மதிப்பில்) 8000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் 10 கிலோ எடையுடைய உடைமைகளை மட்டுமே கப்பலில் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில், அதனை 7 கிலோ ஹேண்ட் பேக் எடையாகவும், 15 கிலோ செக் இன் எடையாகவும் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கவுள்ளோம்.

இது தவிர 15,000 ரூபாவுக்கு 2 இரவுகள் பயணம் உட்பட மூன்று நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம், 30,000 ரூபாவுக்கு 5 இரவுகள் 6 நாள் கொண்ட சுற்றுலா பேக்கேஜ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலா பேக்கேஜ் மூலம் ராமர் பாலத்தை நேரடியாக பார்வையிடவும், அதில் நடந்து செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பேக்கேஜ் திட்டத்தில் இருவழி பயணக் கட்டணம், தங்கும் வசதி, போக்குவரத்து வசதியும் செய்து கொடுக்கப்படும்.
அதேபோல் நாகையில் இருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது அதற்கான ஒப்புதல் பெறும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதியளவில் இந்த சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்புகள் உள்ளன.

அதுபோல் மே 2ஆவது வாரத்தில் 2ஆவது பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இதில் 250 இருக்கைகளில், 220 எக்கனாமிக் இருக்கைகளும், 20 பிசினஸ் இருக்கைகளும், 10 சூட் ரூம்கள் வசதியும் இருக்கும்.

வடகிழக்கு பருவமழை காலகட்டங்களில் கப்பல் போக்குவரத்தை நிறுத்தி வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். ஆனால், இந்த 2ஆவது கப்பல் போக்குவரத்தானது புயல் சின்னம் உருவாகும் காலத்தை தவிர்த்து, ஆண்டு முழுவதும் மற்ற அனைத்து நாட்களிலும் இயங்கும் வகையிலான தரத்தில் உருவாக்கி வருகிறோம் என்றார்.

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp