உள்ளூர் செய்திகள்

வவுனியா மாநகரசபையில் போட்டியிடும் ஜேவிபி வேட்பாளரின் வீட்டிலிருந்து வாக்காளர் அட்டைகள் மீட்பு, இருவர் கைது

வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (28-04) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையம் ஒன்றில் ஒருதொகை உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒருதொகை வாக்காளர் அட்டையினை மீட்டுள்ளனர்.

இதேவேளை, அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக வியாபாரநிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வியாபார நிலைய உரிமையாளரின் சகோதரன் தேசியமக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp