உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கிளீன் சிறிலங்கா பொலிஸாருக்கு எதிராக நயினாதீவு மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நயினாதீவு இறங்குதுறையில் மணல் ஏற்றி – இறக்கும் தொழிலில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதி வேண்டியே பொதுமக்கள் இவ்வாறு கவன ஈர்ப்பில் ஈடுபட்டனர்.

நேற்று முன்தினம் (26-04) மணல் ஏற்றி இறக்கும் இறங்குதுறையில் தொழிலாளிகளுக்கும் தொழில் வழங்குனருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி இருந்தது.

இதனைத் தொடர்ந்து இருதரப்பினரும் இடையில் தொடர்ந்தும் முறுகல் ஏற்பட்டிருந்த நிலையில் தொழிலாளி ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இந்த நிலையில் தொழிலாளிகளின் உறவினர்கள் அவருடன் முரண்பாட்டில் ஈடுபட்டு இருந்தவர்களில் இருவரை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

பொலிஸ் நிலையத்தில் இருதரப்பினராலும் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் காணாமல் போன மற்றும் ஒரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த இருவரும் சம்பந்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

தற்பொழுது தொழிலாளிகள் தரப்பைச் சேர்ந்த எட்டு பேர் ஊர்கார்த்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸார் பக்கச்சார்பாக நடப்பதாகவும் இதற்கு நீதி கோரியும் ஊர்காவல்துறை இறங்குதுறையில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp