உள்ளூர் செய்திகள்

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை பயன்படுத்தி நேர்வேயில் நிதி சேகரிப்பு- அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு

மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாகவும் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் குறித்த நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அமைதியாகச் செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை இந்த மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர்.

இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி இவர்களைத் தடைசெய்து அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp