உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

74 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 24 வயது இளைஞன் கைது

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டப் பகுதியில் 74 வயது மூதாட்டியை 24 வயது இளைஞர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘குற்றவாளிகளை கைது செய்து சட்டத்தை நிலைநாட்டு’, ‘கைது செய் போதை குற்றவாளியை கைது செய்’, ‘போதைப்பொருளை ஒழிப்போம்’ போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோஷம் எழுப்பினர்.

அதனை தொடர்ந்து, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்குச் சென்ற ஹட்டன் பொலிஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து, நிலைமை தொடர்பாக ஆராய்ந்து, இவ்விடயத்தில் கவனம் செலுத்தியதன் பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கையில்

பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று (22-04) சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20ஆம் திகதி குறித்த தோட்டப் பகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் உட்கொண்டுவிட்டு, மூதாட்டி தனிமையில் வீட்டில் இருந்த வேளையில், மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்துள்ளான்.
பின்னர், இளைஞன் மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஹட்டன் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp