ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் காரைதீவு கோட்டத்தில் 48 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளரும்,பிரதி கல்விப் பணிப்பாளருமான ஆ. சஞ்சீவன் தெரிவித்தார்
காரைதீவில் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.அந்த வகையில்,
காரைதீவு இராமகிருஷ்ண பெண்கள் பாடசாலை – 17 மாணவர்கள்,
இராமகிருஷ்ண ஆண்கள் பாடசாலை – 07 மாணவர்கள்,
சண்முகா மகா வித்தியாலயம் – 03 மாணவர்கள்,
விஷ்ணு வித்தியாலயம் – 03 மாணவர்கள்,
விக்கினேஸ்வரா வித்தியாலயம் – 02 மாணவர்கள்,
கண்ணகி இந்து வித்தியாலயம் – 01 மாணவர்
என மொத்தம் 33 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கோட்டத்தில் உள்ள , மாவடிப்பள்ளி அல் அஷ்ரப் மகா வித்தியாலயத்தில் 12 மாணவர்களும், மாளிகைக்காடு சபினா வித்யாலயத்தில் 02 மாணவர்களும், அல் ஹுசைன் வித்யாலயத்தில் 01 மாணவரும்
சித்தி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு37 மாணவர்களும்,
2025 ஆம் ஆண்டில் 41 மாணவர்களும் , இம்முறை
2026 ஆம் ஆண்டில் 48 மாணவர்களும் சித்தி பெற்று சிறந்த வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஆ.சஞ்சீவன் மேலும் தெரிவித்தார்.
நிருபர்
வி.ரி.சகாதேவராஜா
What’s your Reaction?

