உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

4 ஆண்டு காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, செலவுட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இராண்டு பதவி காலத்தில் 33 நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இப்பயணங்களில் 154 பேர் பங்குபற்றியுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொண்ட 3 வெளிநாட்டு பயணங்களில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.

இதற்கு 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.
பதவிக்கான சிறப்பு சலுகையின் சுமையை மக்கள் மீது நாங்கள் சுமத்தவில்லை
இதுவே அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்ப மாற்றமாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இருப்பினும் இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது.

2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 3,572 மில்லியன் ரூபா, செலவுடப்பட்டுள்ளது

2015-2019 வரையான காலப்பகுதியில் மைத்திரிபால சிறிசேனவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 384 மில்லியன் ரூபாய், செலவுடப்பட்டுள்ளது

2020-2022 வரையான காலப்பகுதியில் கோட்டபய ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 126 மில்லியன் ரூபாய், செலவுடப்பட்டுள்ளது

2023-2024 வரையான காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 533 மில்லியன் ரூபாய் என்ற அடிப்படையில் நிதி செலவிடப்பட்டுள்ளது.

2024.09.21 முதல் 2025 பெப்ரவரி மாதம் வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெளிநாட்டு பயணங்களுக்காக 1.8 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளது.

நாங்களும் சேவையாற்றியுள்ளோம், இந்த நாட்டு மக்களை சர்வதேச மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளோம்.

இருப்பினும் மக்களுக்கு சுமையாக இருக்காமல், செலவுகளை இயலுமான வகையில் குறைத்துக் கொண்டுள்ளோம்.

2023 -2024 வரையான காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 33 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

இந்த 33 பயணங்களிலும் மொத்தமாக 154 பேர் பங்குப்பற்றியுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதுவரையில் 3 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார். அவற்றில் 11 பேர் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.

ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
உரிய நபர்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்பதற்கு எவ்வித மாற்றுக்கருத்தும் கிடையாது.

இருப்பினும் கடந்த காலங்களில் உரிய தரப்பினர்களா சென்றுள்ளார்களா என்பது கேள்விக்குள்ளாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு சென்றபோது அவருடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களும் சென்றார்கள்.

இதுவும் அரசியல் இலஞ்சமாகும். பதவிகளுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகள் முறைகேடான வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலாச்சாரத்தை மாற்றியமைத்துள்ளதாக பிதமர் தொவித்துள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp