செய்திகள் விளையாட்டு

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் சிம்பாப்வேயை அணியை அயர்லாந்து வீழ்த்தியது

3 e0aeaae0af8be0ae9fe0af8de0ae9fe0aebfe0ae95e0aeb3e0af8d e0ae95e0af8ae0aea3e0af8de0ae9f e0ae92e0aeb0e0af81e0aea8e0aebee0aeb3e0af8d | Pathivu News

அயர்லாந்து கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி ஹராரே மைதானத்தில் நேற்று நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து பந்துவீச்சு தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 49 ஓவரில் 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
வெஸ்லி மாதேவரே 61 ஓட்டங்களும் சிக்கந்தர் ராசா ஓட்டங்களும் எடுத்தனர்.
அயர்லாந்து சார்பில் மார்க் அடேர் 4 விக்கெட்டும், கர்டிஸ் கேம்பர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 246 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து களமிறங்கியது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஆட்டக்காரர் பால்பிர்னி 11 ஓட்டங்களுக்கு ஏமாற்றினார்.
அடுத்து இணைந்த பால் ஸ்டிர்லிங்-கர்டிஸ் கேம்பர் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர். பால் ஸ்டிர்லிங் 89 ஓட்டங்களும் கர்டிஸ் கேம்பர் 63 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில், அயர்லாந்து அணி 48.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 249 ஓட்டங்கள் அடித்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp