இந்தியா

18 வயதுக்குட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சிக்குட்படுத்தினால் இனி தமிழகத்தில் மரண தண்டனை

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக தண்டனை விதிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து சட்டப்பேரவையில் நிறைவேறிய சட்ட திருத்தம், ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலை அடுத்து இன்று அரசிதழில் வெளியானது

கடந்த 25ம் தேதி ஆளுநர் ஒப்புதல் அளித்த நிலையில், அன்றைய தேதியில் இருந்து இந்த சட்டத்திருத்தம் அமலுக்கு வந்ததாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த சட்டதிருத்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது:-

பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் கற்பழிப்பு குற்றத்திற்கு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. நம்பிய நெருங்கிய உறவினராலோ பெண் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், அந்த குற்றத்திற்கு 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவை, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தி விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது. 66-ம் பிரிவில், பெண்ணுக்கு வன்புணர்ச்சி மற்றும் மரணம் அல்லது நிரந்தர ஊனத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

பெண்ணை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு, 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனையாக உயர்த்தப்படுகிறது.

18 வயதுக்கு உட்பட்ட சிறுமியை கூட்டு வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்கு ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்படுகிறது.

சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்திய குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 3 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்கு 1 ஆண்டு முதல் 5 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பாலியல் தொல்லைகளுக்கான தண்டனை 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது. பெண்ணின் ஆடையை அகற்றும் நோக்கத்தில் தாக்கும் குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

மறைந்திருந்து காணும் பாலியல் கிளர்ச்சி என்ற குற்றத்திற்காக 1 முதல் 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 3 முதல் 7 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 முதல் 10 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

பெண்ணை பின்தொடரும் குற்றத்திற்காக 3 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 5 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது. மீண்டும் அதை செய்தால், அந்த குற்றத்திற்காக 5 ஆண்டுகள் வரை விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையின் அளவு, 7 ஆண்டுகள் வரை உயர்த்தப்படுகிறது.

அமிலம் என்ற ஆசிட் வீசி பெண்களுக்கு கொடுங்காயங்களை ஏற்படுத்தினால், 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையான தண்டனையின் அளவு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை நீட்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆசிட் வீச முயன்றால், 5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையான தண்டனையின் அளவு, 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமின் கோரினால், அவர் அப்படிப்பட்ட குற்றவாளி அல்ல என்பதும், எந்த குற்றத்தையும் அவர் செய்ய வாய்ப்பில்லை என்பதற்கான திருப்தியான காரணங்கள் தெரியும்வரை ஜாமின் அளிக்கக் கூடாது.

 

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp