செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

12 உயிர்களைக் காக்கச் சொல்லும் பொன்சேகா..!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கு மன்னிப்பு வழங்குமாறு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதியிடம் விசேட கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நேற்று (18.02.2026) கொழும்பில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய முடியும் எனக் கூறினார்.

“அமரகீர்த்தி கொலைக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மன்னிப்பு வழங்குங்கள். இவ்வாறானவர்களை மரண தண்டனையிலிருந்து விடுவிப்பதென்பதை ஜனாதிபதி ஒரு பேனா அசைவில் செய்ய வேண்டும்,” என அவர் கூறினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு அதிகாரி படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 12 பேருக்கு, கம்பஹா விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் கடந்த 11 ஆம் திகதி மரண தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp