உலகம் புதியவை முக்கிய செய்திகள் வினோத உலகம்

ஈரானில் கடந்த 5 நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலி..!

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி இன்றுடன் (04.03.2026) 5 நாட்கள் ஆகின்றன.

கடந்த 28 ஆம் திகதி முதல் இன்று வரையான காலப்பகுதிக்குள் ஈரானில் 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.

அவர்களுள் 181 பேர் 10 வயதுக்கும் குறைந்த சிறுவர்கள் அடங்குவதாக என அந்த நிறுவனம் கூறுகிறது.

காயமடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை 5,402 ஆக அதிகரித்துள்ளதோடு, அவர்களுள் 100 பேர் சிறுவர்கள் என HRANA செய்தி நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் குறைந்தது 104 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ முகாம்கள், வைத்திய நிலையங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் அறிக்கையிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மரணங்கள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp