உள்ளூர் உலகம் புதியவை முக்கிய செய்திகள்

மீண்டும் ஆரம்பமான மத்திய கிழக்கு விமான சேவைகள்..!

e0aeaee0af80e0aea3e0af8de0ae9fe0af81e0aeaee0af8d e0ae86e0aeb0e0aeaee0af8de0aeaae0aeaee0aebee0aea9 e0aeaee0aea4e0af8de0aea4e0aebfe0aeaf | Pathivu News

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்ட போர் மோதல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய, நேற்றுறு (03.03.2026) பிற்பகல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் நோக்கி முதலாவது விமானம் புறப்பட்டுச் சென்றது.

ஃபிட்ஸ் எயார் (Fits Air) விமான சேவைக்குச் சொந்தமான 8D 821 என்ற விமானம் நேற்று(03.02.2026) பிற்பகல் 01.20 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து துபாய் நோக்கிப் புறப்பட்டதாக விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இந்த விமானத்தில் 47 பயணிகளும் 10 விமானப் பணியாளர்களும் பயணித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு வான்பரப்பு குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு மாத்திரம் திறக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடைப்பட்ட நேரத்தில் விமானங்கள் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பறக்கின்றன.

இதற்கிடையில், ஏர் அரேபியா (Air Arabia) நிறுவனத்திற்குச் சொந்தமான G-9509 என்ற விமானம் இன்று மாலை 04.45 மணியளவில் கட்டுநாயக்கவிலிருந்து சார்ஜா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளது. இதில் 44 பயணிகளும் 10 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

எதிர்வரும் நாட்களில் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான ஏனைய விமான சேவைகளும் படிப்படியாக வழமைக்குத் திரும்புவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp