முக்கிய செய்திகள்

10 மாத சேயை தண்ணீரில் அமிழ்த்தி கொன்ற தாய்

அனுராதபுரம் ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வௌ பகுதியில்; நேற்று முன்தினம் இரவு குழந்தையொன்று ஒ இறந்ததாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது.

புலனகம, பலுகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லாத நிலையில் குழந்தையை வீட்டிற்கு பின்னால் உள்ள தண்ணீர் குழிக்குள் வீசி பின்னர் குழந்தையை மீட்டு, வீட்டின் கட்டிலில் வைத்ததாக தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பலுகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

கொலைக்காண காரணம் இன்னும் தெரியவரவில்லை

 

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp