உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

10நாள் பொறுமை… 23 அன்று போராட்டம்? மருத்துவர்களின் மிரட்டலும் அமைச்சரின் மௌனமும்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தி கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இடையே சமீபத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது 13 ம் திகதி நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நிறைவேற்று குழு கூட்டத்தில், எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தமிய கலாநிதி பிரபாத் சுகததாச, 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக மருத்துவர்களின் கோரிக்கைகள் தீர்க்கப்படாத காரணத்தால் கடந்த காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், அனைத்து தர மருத்துவர்களையும் உள்ளடக்கும் வகையில் ‘இலங்கை சுகாதார சேவை’ எனும் சிறப்பு அரச சேவை பிரிவை உருவாக்குவதற்கும், மருத்துவர்களுக்கான சல கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும், 22 கீழ் 99 சுற்றறிக்கையின் கீழ் போக்குவரத்து பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், கூடுதல் கொடுப்பினவை நிரந்தர அலவன்ஸாக மாற்றுவதற்கும், ஆய்வு கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் அமைச்சரவை அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எழுத்து மூலம் உறுதி அளித்ததை அடுத்து அந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதாக கூறினார்.

தற்போதைய நிலைமை உருவாகியதற்கு அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார அமைச்சே பொறுப்பு என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp