உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹரிணி தொடங்கிய கல்வி மாற்றப் பயணம்

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் தேசிய நிகழ்ச்சியை உத்தியோகப்பூர்வமாக பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று தொடங்கி வைத்தார்.

அதுருகிரியா குணசேகர வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம் முதற்கட்டமாக முதலாம் தரத்திலிருந்து புதிய கல்வி மாற்றங்கள் அமல்படுத்தப்படுகின்றன.

அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள 2026 கல்வி மறுசீரமைப்புகள்இ பழைய கல்விமுறையிலிருந்துஇ மாணவர் மையப்படுத்தப்பட்ட மற்றும் நடைமுறை சார்ந்த கற்றல் முறைக்கு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

மாணவர்களின் கல்விச் சுமையை குறைப்பதுடன்இ ஆரம்ப நிலையிலேயே தொழில்முறை திறன்களை அறிமுகப்படுத்தவும்இ பாடத்திட்டத்தை நவீனமயமாக்கவும் இந்த மாற்றங்கள் நோக்கமிடுகின்றன.

முதலாம் தரப் பாடத்திட்டம் முழுமையாக மறுவடிவமைக்கப்பட்டுள்ளது. இலகுரகஇ அரையாண்டு அடிப்படையிலான பாடப்புத்தகத் தொகுப்புகள்இ டிஜிட்டல் கற்றல் கருவிகள் மற்றும் திட்டமிட்ட நேர அட்டவணைகள் இதில் அடங்குகின்றன.

விளையாட்டு வழிக் கற்றல்இ உடற்கல்வி செயல்பாடுகள் மற்றும் கலைச் செயல்பாடுகள் மூலம் மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் புதிய முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை சமமாகக் கிடைக்கச் செய்வது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பொருளாதாரத் தடைகள் காரணமாக கல்வி பாதிக்கப்படாத சூழலை உருவாக்கும் நோக்கத்துடன்இ கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை என்ற கொள்கையை அரசு மேலும் வலியுறுத்தியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp