உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஶ்ரீதரன் பதவி விலக வேண்டும்: தயாசிறி ஜயசேகரம் பாராளுமன்றத்தில் கடுமையாக சாடல்!

e0aeb6e0af8de0aeb0e0af80e0aea4e0aeb0e0aea9e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebf e0aeb5e0aebfe0aeb2e0ae95 e0aeb5e0af87e0aea3e0af8de0ae9f | Pathivu News

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் பதவி விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.

அவர் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார்.

எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார்.

அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.

தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது ஶ்ரீதரன் ஆதரவு வழங்குகிறார்.

அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை. சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது அவரது மகனான ஶ்ரீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக் கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது.

எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார்.

அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

வடக்கு மக்களின் வாக்கில் பாராளுமன்றம் வந்த அவர், வடக்கு மக்களுக்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.

எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து எஸ்.ஶ்ரீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp