உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வெளிநாடுகளில் இலங்கையர் பாதுகாப்பை வலுப்படுத்துகின்றது இலங்கை

வெளிநாடுகளில் வாழும் இலங்கைப் பிரஜைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், உலகத் தூதரக பிரதிநிதிகள் கூட்டமைப்பின் 2026 தென் ஆசிய பிராந்திய மாநாட்டில் உலகத் தூதரக பிரதிநிதிகள் மத்தியில் வலியுறுத்தினார்.
இந்திய கடலோர பாதுகாப்புப் படையினரால் இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சமீபத்திய சம்பவத்தின் பின்னணியில் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
சின்னமன் லைஃப் வளாகத்தில் நடைபெற்ற உலகத் தூதரக பிரதிநிதிகள் கூட்டமைப்பின் 2026 தென் ஆசிய பிராந்திய மாநாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றிய அமைச்சர், ‘சார்பில்லாத நிலைப்பாடு, மூலோபாய சுயாட்சியம், கட்டுமான ஈடுபாடு’ ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கையின் வெளியுறவு கொள்கையை விளக்கினார்.
தங்களது பணிப்பரப்புகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க கௌரவத் தூதரக பிரதிநிதிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
வென்னப்புவைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையுடன் வெளியுறவு அமைச்சும் கடற்படையும் முன்னெடுத்துள்ளது.
தொடக்க அமர்வில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, இலங்கை மீளெழுச்சிப் பாதையில் பயணித்து வருவதாக தெரிவித்தார்.
பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதுடன், நாணய கையிருப்புகள் உயர்ந்து வருவதாகவும், உலகளாவிய நம்பிக்கை மீண்டும் உருவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்ற சவால்கள், குறிப்பாக டிட்வா சூறாவளி போன்ற அனர்த்தங்களில் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் மீளெழுச்சிக்கும் உலகளாவிய தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் தூதரக வலையமைப்பு முக்கிய பங்கு வகிப்பதாக இரு தலைவர்களும் வலியுறுத்தினர்.
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த குஐஊயுஊ மாநாடு, தென் ஆசிய நாடுகளின் தூதரக அதிகாரிகளை ஒருங்கிணைத்து, இராஜதந்திரம், வர்த்தகம் மற்றும் சட்ட ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகிறது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp