உலகம் செய்திகள்

வெனிசுவலா ஜனாதிபதி மதுரோ அமெரிக்காவின், நியூயோர்க்கில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை சிறைபிடித்த அமெரிக்கா, அவரை நியூயார்க் கொண்டு சென்றுள்ளது.

அங்கே மன்ஹாட்டனின் மேற்குப் பகுதியில் உள்ள அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்திற்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் அழிவுகரமான ஆயுதங்களை வைத்திருப்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை அமெரிக்காவில் மதுரோ எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரியவருகின்றது

அதேநேரத்தில், வெனிசுவேலாவில் அரசு நிர்வாகத்தை கவனிக்க துணை ஜனாதிபதி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வெனிசுலா தலைநகர் கராகஸில் இருந்து சனிக்கிழமை அதிகாலையில் மதுரோ ஒரு அமெரிக்க ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டார்.

கரீபியன் கடலில் ரகசிய இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் அயோவா ஜிமா என்ற போர்க்கப்பலில் அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கியது. மதுரோ அந்த கப்பலில் ஏற்றப்பட்டார்.

பின்னர் கியூபாவில் உள்ள குவாண்டனாமோ விரிகுடாவில் அமெரிக்க கடற்படைத் தளத்திற்கு விமானத்தில் அவர் கொண்டு செல்லப்பட்டார்.

அமெரிக்க கடற்படை தளத்தில் இருந்து நியூயார்க் மாகாணத்தின் ஓரஞ் கவுன்டியில் உள்ள ஸ்டீவர்ட் விமானப்படைத் தளத்திற்குச் கொண்டு செல்வதற்காக மற்றொரு விமானத்திற்கு மதுரோ மாற்றப்பட்டார் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp