உலகம் செய்திகள்

விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியிருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் சாண்டா தொப்பிகளுடன் விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

நாசா வெளியிட்ட வீடியோவில் சுனிதா வில்லியம்ஸ் சிவப்பு சட்டை அணிந்திருப்பதையும், மற்ற மூவர் சாண்டா தொப்பியை அணிந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்நிலையில் இந்த காணொளி இணைய வாசிகளிடையே பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

8 நாள் பயணமாக கடந்த ஜூன் 5 ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்ட வீரர்கள், தொழிநுட்ப பழுது காரணமாக பல மாதங்களாக அங்கேயே சிக்கியுள்ளனர்.
அடுத்த வருடம் பிப்ரவரி மாதம்தான் மீண்டும் அழைத்துவரப்படுவார்கள் என்று நாசா கூறி வருகிறது.

எனவே 8 நாள் பயணத்துக்கு திட்டமிட்ட நாசா அவர்கள் விண்வெளியில் சிக்குவார்கள் என்று தெரிந்தே டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ்-க்கு தேவையான அலங்கார மரம், சாண்டா தொப்பி உள்ளிட்டவற்றை கொடுத்து அனுப்பியது எப்படி என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர்.

இதற்கு பதிலளித்துள்ள நாசா நவம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு மூன்று டன் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன என்றும், கிறிஸ்துமஸ் மரம் மற்றும் பிற அலங்காரங்கள் மற்றும் பரிசுகள் வீரர்களுக்கு அனுப்பப்பட்டன என்றும் தெரிவித்துள்ளது.

இந்த தொகுப்பில் வான்கோழி இறைச்சி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், பிஸ்கட் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன.

இது தவிர, சில பணி சார்ந்த மற்றும் தொழிநுட்ப்ப பொருட்களும் அவர்களுக்கு இதில் அனுப்பி வைக்கப்பட்டன என்று விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்>இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்ட மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள்!

https://youtu.be/oYMTXZ1a2NU

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp