உள்ளூர் முக்கிய செய்திகள்

வாகன இறக்குமதியால் மக்களுக்கு பலனில்லை – பொருளியலாளர்கள்!

எதிர்வரும், பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரி கொள்கைகளை அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அதன் நன்மைகள் வாகன விற்பனையாளர்களால் அநீதியான முறையில் பெற்றுக் கொள்ளப்படும் என பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தலையிட வேண்டும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

கடந்த ஐந்து வருடமாக காணப்பட்ட வாகன இறக்குமதிக்கான தடை எதிர்வரும் பெப்ரவரி மாதம் தளர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், தற்போது புதிய வரி கொள்கைகளுக்குக்கு மேலாக வாகன இறக்குமதிக்கான ஏனைய அனைத்து வரிகளும் சேர்க்கப்பட்ட பின்னரான முழு வரியானது 500 சதவீதமாக அதிரிக்ககூடும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வருடத்திற்குள் 50,000 வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் அரசாங்கம் அறிவிக்கும் வரி விகிதங்களால் நுகர்வோர் பயனடையமாட்டார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள வரி கொள்கைக்கும் முன்னர் இருந்த வரிக் கொள்கைக்கும் பாரிய வித்தியாசங்கள் இல்லை.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான வரிகள் சாதாரணமாக 300 சதவீதத்திற்கும் 400 சதவீதத்திற்கும் இடையில் உள்ளது.

இந்தநிலையில், வாகன விற்பனையாளர்கள் வாகன சந்தையில் பாரிய மாஃப்பியாவை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், குறிப்பிட்ட சில வாகனங்களுக்கான விலை முகாமைத்துவத்தை பேணி வருகின்றனர்.

இதன் காரணமாக நுகர்வோர் பயனடையமாட்டார்கள்.

ஆகையால் தற்போதுள்ள வரி கொள்கைக்கு அமைய, வர்த்தகர்களும் இடைத்தரகர்களுமே பயனடைவார்கள் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஸ்ட பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>வவுனியாவில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp