முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாகாணங்கள் சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நிலவும் மோசமான வானிலையால் இதுவரை 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலையானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அண்மைய நாட்களில் தொடர் மழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் 7,970 குடும்பங்களைச் சேர்ந்த 29,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மோசமான வானிலை காரணமாக 319 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp