உலகம் செய்திகள்

ரஷியாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம்!

கிறிஸ்துமஸ் தினத்தன்று உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு ஆண்டுகளைக் கடந்துள்ளது.
இருதரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி அளித்து வருகின்றன.

இதற்கிடையே, உக்ரைனின் அனல்மின் நிலையங்கள் உள்பட எரிசக்தி கட்டமைப்புகள் நிறைந்த கார்கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைக் குறிவைத்து ரஷிய படையினர் நேற்று தாக்குதல் நடத்தியது.

டிரோன்கள் எனும் ஆளில்லா விமானங்களால் தாக்குதல் நடத்தியது.
அனல்மின் நிலையங்களை குறிவைத்து ரஷிய படை தாக்குதல் நடத்தியதால் ஏராளமான நகரங்கள் இருளில் மூழ்கின.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் அன்று தாக்குதல் நடத்திய ரஷியாவுக்கு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.

இதுதொடர்பாக, உக்ரைன் ஜனாதிபதி ; ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் தருணத்தில் உக்ரைன்மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகள் நிறைந்த பகுதிகளைக் குறிவைத்து 70-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட டிரோன்கள் வாயிலாக தாக்குதலை ரஷியா தொடுத்துள்ளது.

இதைவிட மனிதாபிமானமற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியுமா என அவர் பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுக்கப்படும்: ஜோபைடன்

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp