செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரஜரட்ட பல்கலை மாணவர்கள் நெருக்கடி நிலையில்..!

அரச பல்கலைக்கழக கட்டமைப்பில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு சுமார் 50 சதவீத பற்றாக்குறை நிலவுவதாகவும், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளதாகவும் அதன் முகாமைத்துவ பீட மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் திலிண நிரோஷ் சுட்டிக்காட்டுகையில், முகாமைத்துவ பீடத்தில் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி பயின்ற போதிலும், அவர்களுக்குக் கற்பிப்பதற்கு 12 பேராசிரியர்கள் மாத்திரமே உள்ளமையால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தில் தற்போது 45 சதவீத விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்குத் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் மாணவர்களின் கற்றல் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள பிரதான பிரச்சினை யாதெனில், ஆய்வுப் பணிகளை மேற்கொள்வதற்குத் தேவையான அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு பேராசிரியர்கள் இல்லாத நிலையே காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் ஆய்வுப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தின் 6 துறைகளிலும் சுமார் 2,000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். ஆனால், கவலைக்குரிய விடயம் என்னவென்றால், அவர்கள் அனைவருக்கும் தற்போது 12 பேராசிரியர்கள் மாத்திரமே உள்ளனர்.” என்றார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp