உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். வடமராட்சி கிழக்கில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக்கட்களை நிறுவியுள்ளனர்

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் தங்கள் பிரதேசத்தில் வளங்கள் சூறையாடப்படுவதாகவும் அது தொடர்பாக எந்த தகவல்கள் தெரிந்தாலும் தமக்கு உடனடியாக தெரியப்படுத்துங்கள் எனவும் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்

இதுதொடர்பில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
தமது எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் தமது அனுமதியுடன் கட்டடங்கள் அமைப்பதற்கு தாம் அனுமதி கொடுப்பதாகவும் குறிப்பாக மருதங்கேணி பருத்தித்துறை வீதியின் ஆற்றங்கரை பக்கம் தாம் எந்த வித அனுமதியும் கொடுக்க போவதில்லையென தெரிவித்துள்ளனர்

ஏனெனில் அவ் எல்லைகள் அதிவிசேட எல்லைகளுக்கு உட்பட்டு இருப்பதால் கட்டிடங்களுக்கு அனுமதி கொடுப்பது கடினம் என சுட்டிக்காட்டியுள்ளனர்
தொடர்ந்து ஊடகவியலாளர் ஒருவர், ‘உங்கள் எல்லைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருப்போரை வெளியில் எழுப்புவதற்கான சாத்தியக்கூறு இருக்கின்றதா என வினவினார்.

இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மக்களை பயப்பட வேண்டாம் எனவும் அப்படிப்பட்ட செயல்கள்; செய்யப்போவது இல்லை எனவும் கூறியுள்ளனர்
வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை விடுவிக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமாக தமது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களை முக்கிய கட்டடங்கள் கட்டுவதற்கு தம்மை உரிய முறையில் நாடினால்; அனுமதி தரத் தயாராக உள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர மேலும் தெரிவித்துள்ளனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp