உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ். நெடுந்தீவு மக்களை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் சந்தித்தனர்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தின் ஏற்பாட்டில் நெடுதீவுக்கான கள விஜயம் ஒன்று ஆணையாளர் பேராசிரியர் தை.தனராஜ் தலைமையில் (28-02-2025 ) மேற்கொள்ளப்பட்டது.

இந்த களவிஜயத்தின்போது நெடுந்தீவு பிரதேச மக்களது மனித உரிமைகள் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் நெடுந்தீவிலுள்ள பொது அமைப்புகளிடமும் பொது மக்களிடத்திலும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் கல்வி மற்றும் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் தை. தனராஜ் ஆணைக்குழுவின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் சட்டத்தரணி கபிலன் வில்லவராயன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் திரு தங்கவேல் கனகராஜ் , ஆணைக்குழுவின் மனித உரிமை அலுவலர் செல்வி குமுதினி சேவியர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் நிவேதிகா ,வேலணை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி ஜெயக்குமார் மற்றும் தீவக கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் த.தருமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு மக்களது பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.

மேலும் இந்த களவிஜயத்தின்போது, நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அரச ஊழியர்களுக்கு மனித உரிமைகள் தொடர்பிலும் பொறுப்புடைமை தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றதுடன் நெடுந்தீவு பிரதேச வைத்திசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள பிரச்னைகள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் ஆராயப்பட்டது. அத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கும் களவிஜயம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இந்த களவிஜயத்தின் போது பெற்றுக்கொள்ளப்பட்ட அவதானிப்புகளின் அடிப்டையில், பொறுப்புவாய்ந்த அரச திணைக்கள பிரதானிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp