உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ் சிறப்பு குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரியின் இடமாற்றத்தின் பின்னணியில் சட்டத்தரணிகள்?

பல்வேறு மோசடி வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து, நீதிமன்ற நடவடிக்கைகள் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு துரிதமாக நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என அறியப்பட்ட யாழ்ப்பாணம் சிறப்பு குற்ற விசாரணை பிரிவின் (SCIB) பொறுப்பதிகாரி, காவல்துறை பரிசோதகர் குணறோயனுக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகரின் கீழான இணைப்பு பிரிவுக்கு பொறுப்பதிரியாக இடமாற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சிலரின் காவல்துறை மேலிடத்துக்கான மனுக்கள், காவல்துறையின் மாவட்ட நிலை நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாகவே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுன்னாகத்தைச் சேர்ந்த காவல்துறை பரிசோதகர் குணறோயன் காணி மோசடிகள், பண மோசடிகள் உள்ளிட்ட வழக்குகளை துரிதமாகவும் நிரூபிக்க கூடிய வகையில் முன்னேடுத்து வந்து நீதிமன்றின் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுத்தார் என்ற பலராலும் பாராட்டுப்பெற்றவர்.

தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்குமிக்க மோசடிக் கும்பல்கள், யாழ்ப்பாணத்தில் காணி மோசடிக்கு உடைந்தையாக இருந்த சட்டத்தரணிகள் போன்ற பலம்பெற்ற தரப்புகளுக்கு எதிராக துணிச்சலாக விசாரணைகளை அவர் முன்னெடுத்திருந்தார் என பலரும் தெரிவித்துள்ளனர்

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp