உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் தொடரூந்து மீது 13 வயது சிறுவர்கள் கல் வீச்சு தாக்குதல் நடாத்தியதால் கைது!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில், தொடரூந்து; மீது தெடர்ச்சியாக கல் வீச்சு தாக்குதலை நடாத்தி வந்த மூவர் நேற்று (22-02-2025) கைது செய்யப்பட்டனர்.

யாழ். மாவட்ட பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜயசிங்கவின் கட்டளைக்கிணங்க, மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் தகவலுக்கு அமைய மூன்று பேர் யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் தேவி நேற்றுமுன்தினம் யாழ் நேக்கி வரும்பொழுது குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது.
தொடரூந்து வரும்போது அரியாலை பகுதியில் வைத்து கல் எறிவதை தொடரூந்தில் சென்ற ஒருவர் தற்செயலாக படம் பிடிக்கும்போது அந்த தாக்குதல் வீடியோவில் பதிவாகியது.

ஏற்கனவே நடாத்திய கல்வீச்சு தாக்குதலில் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.
இது குறித்து யாழ்ப்பாண ரயில் நிலையமும் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து குறித்த விடயம் யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

15 -13 வயதுகளுக்குட்பட்ட சிறுவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் பாடசாலைக்கும் ஒழுங்கீனமானவர்கள், ஏற்கனவே சிறு சிறு குற்றங்ளை புரிந்தவர்கள் என பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை பெற்றோர்களின் உதவியுடன் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp