உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆசிரியரை தாக்கிய நிதி நிறுவன முகாமையாளரின் தாயாரும் சகோதரிகளும் கைது

தனியார் நிதி நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவர் அயல் வீட்டில் உள்ள ஆசிரியரை மண்வெட்டியால் தாக்கிய நிலையில் பாதிக்கப்பட்ட நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்ச சம்பவமானது கடந்த சனிக்கிழமை அச்சுவேலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணையின் போது, தாக்குதலை மேற்கொண்ட முகாமையாளருக்கு துணைபோன தாயார் மற்றும் இரண்டு சகோதரிகள் இன்று அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும் தாக்குதலை நடத்தியவர் ஆஜராகவில்லை என்பதுடன் அச்சுவேலி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp