உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மொனராகலையில் அநுரவுக்கு எதிராக விவசாயிகள் போர் கொடி

மொனராகலையில் செவனகல பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகள் நேற்று (26-07) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள், செவனகல சர்க்கரை ஆலைக்கு வழங்கிய கரும்புக்கான தொகை செலுத்தப்படாததற்கும் நிலுவையில் உள்ள பணம் வழங்கப்படாமைவிற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.

அவர்களின் வலியுறுத்தலின்படி, தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஒரு டொன்னுக்கு 15,000 ரூபா வழங்கப்படும் என வாக்குறுதியளித்திருந்தது.

ஆனால் தற்போது அந்த தொகையை 10,000 ரூபாவாக குறைக்கும் திட்டத்தில் அரசு இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலை தொடர்ந்தால், மொனராகலையில் ‘அநுர கோ கம’ என்ற பிரமாண்டமான மக்கள் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும், தங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திற்கு கடும் எதிர்வினை ஏற்படும் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp