மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதிச் சடங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று, அன்னாரின் பூதவுடல் கொக்குவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் ஊடகப்பரப்பில் 40 ஆண்டுகளுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் பாரதி உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (9-02-2025 ) யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் திருநெல்வேலியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் பாரதியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்றைய தினம் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் மற்றும் அஞ்சலி உரைகள் இடம்பெற்று, தகன கிரியைகளுக்காக மதியம் 1.30 மணியளவில் புகழுடல் கொக்குவில் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.


