உள்ளூர் செய்திகள்

முல்லைத்தீவில் அனல் பறக்கும் வெயிலிலும் மீனவர்கள் போராட்டம்

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்த கோரி முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

”அரசே சட்டவிரோதமான மீன்பிடித் தொழிலை கட்டுப் படுத்தி நீரியல் வளங்களைப் பாதுகாப்பவர்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்து” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்துமாறு கோரி மீனவர்கள் தொடர்ச்சியாக கோரிவந்த நிலையில் அண்மைக் காலமாக கடலிலும் நந்திக் கடல் களப்பு உள்ளிட்ட இழப்பு பகுதிகளிலும் சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று அண்மையில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மீன்பிடி தொழிலை கட்டுப்படுத்துவதற்காக பாடுபடுகின்றவர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp