செய்திகள்

மீண்டும் யாழ்ப்பாணத்திற்கும் தமிழகத்திற்கும் கப்பல் சேவை ஆரம்பம்

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறு நாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக சுபம் குழுமத்தின் தலைவரும் காங்கேசன்துறை, நாகப்பட்டினம் கப்பல் சேவை முதலீட்டாளருமான பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,

இந்தியாவில் சுபம் குறூப் ஒப் கம்பனிஸ் பல்வேறு வியாபார நிறுவனங்களை உள்ளடக்கியதொன்றாகும்.

குறிப்பாக, தனிமனிதனின் தலைமைத்துவத்தில் 500க்கும் மேற்பட்ட பாரவூர்தி போக்குவரத்து சேவையை வழங்குவதாக இருக்கிறது.

அத்துடன் எமது பிறிதொரு நிறுவனமான சுபம் நிறுவனம் காங்கேசன்துறை, நாகப்பட்டினத்துக்கு இடையிலான கப்பல் சேவையில் முதலீடுகளைச் செய்துள்ளது.
இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் இந்த கப்பல் சேவை

ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இம்மாதம் 23ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதற்கான நிலைமைகளும் உள்ளன.

இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த கப்பல் சேவையை சிறிது காலத்துக்கு ஒத்திவைத்துள்ளோம்.

மேம்பட்ட வசதிகளுடன் ஜனவரியில் கப்பல் சேவை மீள் ஆரம்பிக்கபடுமென அவர் மேலும்தெரிவித்துள்ளாhர்

எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகிறது.

நாங்கள் கப்பல் சேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன.

எனினும், அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.
மீள கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம்.

முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக் கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம்.

தற்போது இருவழிக் கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகிறது.
அதனை நாம் 8500 இந்திய ரூபாவாக மாற்றியமைத்துள்ளோம்.
அத்துடன், 10 கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும்.

மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.
அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும்.

அதேநேரம், நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல் போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி பிரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம்.

அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பானங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம்.
மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் நாம் கப்பலில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp