இலங்கை மின்சார சபை மீண்டும் மின்சார கட்டணங்களை உயர்த்த கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், மின்சார நுகர்வோர் சங்கம் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட திருத்தக் கோரிக்கையின் அடிப்படையில், மின்சார சபை 6.8% கட்டண உயர்வை கோரியுள்ளது.
இது தொடர்பில் ECA பொதுச் செயலாளர் சஞ்சீவ தம்மிகா, ‘அவர்கள் ஆறு சதவீதத்திற்கும் மேல் கட்டண உயர்வை கேட்கிறார்கள்.
ஆனால் இப்போது அதற்கு தேவையில்லை. கடந்த காலாண்டில் மட்டும் ரூ.5 பில்லியனுக்கும் அதிகமான லாபத்தை ஈட்டியது.
அது தற்போது ரூ.10 பில்லியன் வரை உயர்ந்துள்ளது. எனவே கட்டணத்தை உயர்த்துவதற்குப் பதிலாக குறைந்தது 20மூ குறைக்கலாம்’ எனக் கூறினார்.
அவர் மேலும், இவ்வாறு கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை மின்சாரம் உற்பத்தி செலவை பிரதிபலிப்பதற்காக அல்ல, மாறாக சபையின் மறுசீரமைப்பின் போது ஊழியர்களுக்கான இழப்பீடுகளை சமாளிக்கத்தான் என குற்றம்சாட்டினார்.
‘சஹஸ்தனவி லிமிடெட் நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்ட மின் கொள்முதல் ஒப்பந்தம் போன்ற உடன்படிக்கைகளின் காரணமாகவே தொடர்ந்து கட்டண உயர்வுகள் கோரப்படுகின்றன.
லாபம் ஈட்டியிருந்தாலும், எப்போதும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கேட்கும் பழக்கத்தில் ஊநுடீ செயல்படுகிறது’ என அவர் சாடினார்.
அதேநேரத்தில், கடந்த வாரம் CEB தனது புதிய கட்டண திருத்தக் கோரிக்கையை PUCSL-க்கு சமர்ப்பித்தது.
அதன் பெறுதலை PUCSL மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியிருந்தாலும், விவரங்களை வெளியிடாமல், இந்த வாரத்திலேயே ஆவணம் பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என தெரிவித்தார்.
இதற்கிடையில், CEB-இன் இலங்கை நிடஹாஸ் சேவக சங்கமயா, மின்சார சபையை நான்கு தனித்தனி நிறுவனங்களாகப் பிரிக்கும் அரசின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடங்கியுள்ள ‘வேலைக்கு ஏற்ப செயல்’ போராட்டத்தை அரசு இதுவரை கவனிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரபத் பிரியந்தா தெரிவித்ததாவது, இந்த முதல் கட்ட போராட்டம் செப்டம்பர் 15 வரை நீடிக்கும்.
ஆனால் அரசு திருப்திகரமான பதிலை வழங்காவிடில், போராட்டம் முழுமையான வேலைநிறுத்தமாக விரிவடையும் என்றும் எச்சரித்தார்.
